சிங்கப்பூரில் 65,000 மறுசுழற்சி பெட்டிகள்… நவ.26 முதல் டிச.23 வரை விநியோகம்

bloobox-collection
Gawain Pek and NEA

சிங்கப்பூரில் புளூபாக்ஸ் (Bloobox) எனப்படும் மறுசுழற்சி பெட்டி விநியோகம் இன்று சனிக்கிழமை (நவ. 26) அன்று அறிமுகம் செய்யப்பட்டது.

யூஹுவா கம்யூனிட்டி கிளப்பில் ‘கிளீன் அண்ட் கிரீன் சிங்கப்பூர்’ நிகழ்வின் போது நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ மூலம் இது அறிமுகம் செய்யப்பட்டது.

யூஹுவா உட்பட ஐந்து தொகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் சோதனை முறையில் அந்த பெட்டிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

மற்ற நான்கு தொகுதிகள் ஃபெங்ஷான், செம்பவாங் வெஸ்ட், தெம்பனிஸ் நார்த் மற்றும் இயோ சூ காங் ஆகியவை ஆகும்.

மேற்கண்ட ஐந்து தொகுதிகளில் உள்ள குடும்பங்கள் அந்த பெட்டிகளை நவம்பர் 26 முதல் டிசம்பர் 23, 2022 வரை தானியங்கு இயந்திரம் மூலம் பெற்று கொள்ளலாம்.

பெட்டிகளைச் பெறுபவர்கள், அருகிலுள்ள தானியங்கு இயந்திரங்கள் எங்குள்ளது என்பதையும், இயந்திரத்தின் இருப்பு நிலைகளையும் ஆன்லைன் மூலமாவே அறியலாம்.