பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 84 பேர் மீது அமலாக்க நடவடிக்கை

(Photo: National Environment Agency)

கோவிட்-19 நடவடிக்கைகளை மீறிய 84 பேர் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) திங்கள்கிழமை (அக்டோபர் 11) தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்களில், உணவங்காடி நிலையங்களில் NEA அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பயனியரில் (Pioneer) கனரக வாகனமான ட்ரெய்லர், லாரி மற்றும் கார்கள் மோதி விபத்து

அவர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட குழுக்களாக ஒன்றுகூடியும், 1மீ பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்க தவறியதாகவும், மேலும் முகக்கவசம் அணியவில்லை அல்லது அதனை முறையாக அணியவில்லை என்றும் NEA தெரிவித்துள்ளது.

அக்டோபர் 8 முதல் 10 வரை இந்த அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

எந்தெந்த இடங்களில் சோதனை நடைபெற்றது?

  • நியூட்டன் உணவங்காடி நிலையம்
  • வம்போவா உணவங்காடி நிலையம்
  • ஹைக் சாலை சந்தை மற்றும் உணவங்காடி நிலையம்
  • கோல்டன் மைல் உணவங்காடி நிலையம்
  • ஹாங் லிம் சந்தை & உணவங்காடி நிலையம்
  • சைனாடவுன் காம்ப்ளக்ஸ் மார்க்கெட் & உணவங்காடி நிலையம்

பாதுகாப்பு இடைவெளி தூதர்கள் மற்றும் அமலாக்க அதிகாரிகளுக்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்களை NEA வலியுறுத்தியது.

“பொதுமக்களின் பெரும்பான்மையானவர்களிடம் ஒத்துழைப்பு இருந்தாலும், ஒத்துழையாமை மற்றும் சில சமயங்களில் தவறாக செயல்படும் சிறிய குழு குற்றவாளிகளும் உள்ளனர்” என்று NEA கூறியது.

நாளை 13 அக்டோபர் முதல், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்கள் மட்டுமே உணவங்காடி நிலையங்களில் அமர்ந்து உணவு சாப்பிட முடியும்.

இந்தியாவில் உள்ள குழந்தைகளை பார்க்க முடியாமல் புற்றுநோயால் அவதிப்பட்ட தாய் – கடைசி ஆசையை நிறைவேற்றிய சிங்கப்பூர்