குற்றவாளிகளை தப்பிக்க வைக்க S$32,500 லஞ்சம்… சிக்கிய போலீஸ் அதிகாரி

BCA contract staff charged bribe
( Photo: Shutterstock )

போலீஸ் அதிகாரி ஒருவர் S$32,500 லஞ்சமாக பெற்றதாகவும், மேலும் சட்ட கடமையை செய்யவிடாமல் தடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2019 மற்றும் 2020 க்கு இடையில், 45 வயதான Poo Tze Chiang என்ற அவர், ரொக்கமாகவும் கடன்களாகவும் இரு நபர்களிடமிருந்து ஏழு முறை பணத்தைப் பெற்றதாக ஊழல் நடைமுறைகள் புலனாய்வுப் அமைப்பின் (CPIB) செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் செயற்கை இறைச்சி கண்டுபிடிப்பு நிலையம் நம்ம சிங்கப்பூரில்!

அந்த இருவருக்கு எதிரான போலீஸ் விசாரணைகள் தொடர்பான தகவல்களையும் உதவிகளையும் வழங்க அவர்கள் போலீஸ் அதிகாரியை அவர்கள் பயன்படுத்தி கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு தகவல்களையும் உதவிகளையும் வழங்க அந்த லஞ்ச பணம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

Poo மீது மொத்தம் 10 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, அதில் ஏழு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மூன்று கடமையை செய்யவிடாமல் தடுத்த குற்றச்சாட்டுகள்.

உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வெளிநாட்டு ஊழியர்கள் – எந்த நாட்டை சேர்ந்தவர்கள் தெரியுமா?