சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வெளிநாட்டவருக்கு 4 வாரச் சிறை..!

bribe police jail MRT station

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற 28 வயதான வெளிநாட்டு இளைஞருக்கு 4 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பூன் லே MRT நிலையத்தில் ஒரு பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிக்கு, சென் லாங் என்ற சீன நாட்டவர் S$50 லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஒப்புக்கொண்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு 300-க்கும் மேற்பட்டோர் பயணம்..!

அதாவது அனைவரும், பொது இடங்களில் இருக்கும் போது மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை மறைத்து முகக் கவசம் அணிய வேண்டும் என்பது கட்டுப்பாடு.

அவர் கடந்த மே மாதம் நடந்த இந்த சம்பவத்தில், பொது இடத்தில் முகக் கவசத்தை முறையாக அணியாமல் இருந்ததாகவும் அதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

இது தொடர்பான விசாரணையில், புகைபிடிப்பதற்காகவும், மேலும் மது அருந்துவதற்காகவும் அவர் தமது முகக்கவசத்தை கழுத்தில் மாட்டியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

அதில் அங்கு இருந்த அதிகாரி லஞ்சத்தை வாங்க மறுத்துவிட்டார். பின்னர், COVID-19 (தற்காலிக நடவடிக்கைகள்) (கட்டுப்பாட்டு உத்தரவு) விதிமுறைகளை மீறியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் S$100,000 வரை அபராதம், 5 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

COVID-19 கட்டுப்பாடுகளை மீறியதற்காக அந்த நபருக்கு S$300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சம்பள பாக்கி, பணிநீக்கம் குறித்த புகார்…முதலாளிகளிடம் இருந்து மொத்தம் S$16 மில்லியன் திரும்ப பெற்ற ஊழியர்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…