போக்குவரத்து காவல் அதிகாரியிடம் தன்னுடைய வேலையை காட்டிய வெளிநாட்டு ஊழியர் – தூக்கிய போலீஸ்

New Upper Changi Road motorcyclist dies
Photo: SPF

சிங்கப்பூரில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக 34 வயது வெளிநாட்டு ஊழியர் மீது நேற்று (பிப் 16) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி பயனியர் சாலைக்கு அருகில் சார்ஜென்ட் ஃபிர்ஹான் அப்துல் ரஷீதிடம் $55 லஞ்ச பணத்தை கொடுக்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நீண்ட கால அனுமதி உடையோருக்கு VTP பயண அனுமதி அவசியம் இல்லை – அப்போ Work Permit அனுமதிக்கு?

கிருஷ்ணா ராவ் நரிசாமா நைடூ என்ற அவர் இதில் 2 ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

மலேசியரான அவர், போக்குவரத்து விபத்து தொடர்பாக தன்னிடம் விசாரிக்க வேண்டாம் என்று அந்த அதிகாரிக்கு S$5 மற்றும் S$50 லஞ்ச பணத்தை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

சார்ஜென்ட் ஃபிர்ஹான் இந்த அதனை நிராகரித்ததாகவும், வழக்கு லஞ்ச தடுப்பு பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் ஊழல் தடுப்பு புலனாய்வுப் அமைப்பு கூறியது.

கிருஷ்ணா S$7,000 ஜாமீனில் வெளிவந்துள்ளார், மேலும் அவர் மீண்டும் மார்ச் 2ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு வருவார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு S$100,000 வரை அபராதமும், ஒவ்வொரு குற்றத்திற்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

“கூனல் முதுகுடன் ஓயாது உழைக்கும் 64 வயதான ஊழியர்” – நடந்தே உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் ரோல் மாடல்!