சிங்கப்பூரில் பள்ளி மாணவி துன்புறுத்தல் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது – கல்வி அமைச்சர்..!

Bullying incident at Mee Toh School
A group of Primary 5 students threw this note and others at a classmate in a case of bullying at Mee Toh School. (Photo: Twitter/@4YSLZ)

மீ தோ (Mee Toh) பள்ளியில் துன்புறுத்துதல் தொடர்பான சம்பவத்தில், 5வது மாணவர்கள் குழு, தன்னுடைய சக வகுப்புத் மாணவியை துன்புறுத்துவது தவறானது, அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது, என்று கல்வி அமைச்சர் ஓங் யீ காங் (மார்ச் 10) தெரிவித்துள்ளார்.

மீ தோ பள்ளியில் துன்புறுத்துதல் தொடர்பான சம்பவத்தை படித்தபோது தாம் திகைத்து போனதாகவும் கவலை அடைந்ததாகவும், திரு ஓங் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் விதிமுறையை மீறிய வெளிநாட்டு மாணவர் அனுமதி ரத்து..!

மாணவர்கள் ஒரு மலாய் மாணவியை தேர்ந்தெடுத்து, அவரைப்பற்றி மோசமான குறிப்புகளை எழுதினர். இது துன்புறுத்தல், மேலும் தவறானது, இதனை பொறுத்துக்கொள்ள முடியாது, குறிப்பாக பள்ளிகளில், என்று அவர் கூடுதலாக குறிப்பிட்டுள்ளார்.

பிறந்தநாள் பரிசு

கடந்த மார்ச் 6 அன்று, தனது சகோதரியின் சக மாணவர்கள் சில காகிதத் துண்டுகளை அவர் மீது வீசியதாக, ட்விட்டர் பயனர் @4YSLZ ஒரு பதிவு செய்தார்.

தன் இதயம் உடைந்தது, தன்னுடைய சகோதரியின் பிறந்த நாள் அன்று, சக மாணவர்களில் ஒருவர் ‘பிறந்தநாள் பரிசு’ என்று அந்த காகிதத்தை தம் சகோதரியின் முகத்தில் எறிந்தார், என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், தமது சகோதரி இப்படிக் கேலி செய்யப்படுவது இது முதல் முறை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இதை தொடர்ந்து, அவர் பள்ளி மற்றும் ஆசிரியர்களை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

சமூகத்திற்கு எதிரானது

இந்த சம்பவம், ஒரு சமூகமாக நாம் மேற்கொள்ளும் சில அடிப்படை மதிப்புகளுக்கு எதிரானது என்று திரு ஓங் கூறியுள்ளார்.

மாணவர்கள் இதுபோன்ற தங்கள் செயல்களின் தீவிர விளைவுகளை புரிந்துகொள்வதையும், ஒழுங்கு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதையும் பள்ளி உறுதி செய்ய வேண்டும் என்றார்.

மேலும் “கருணை, மற்றவர்களுக்கு மரியாதை செலுத்துதல், பல இன சமுதாயத்துடன் ஒத்து வாழ்வது ஆகியவை சிறு வயதிலிருந்தே, குடும்பங்கள், பள்ளிகள் மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சியால் கற்பிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இது அனைத்தும் மாணவர்களுக்கும் கற்றுக்கொள்ள ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் ஆறு புதிய COVID-19 சம்பவங்கள் உறுதி..!

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil