சிங்கப்பூரில் SMRT பேருந்து ஓட்டுனருக்கு COVID-19 தொற்று உறுதி..!

Bus driver tests positive for COVID-19
Bus driver tests positive for COVID-19

COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட SMRT பேருந்து ஓட்டுனர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் கடைசியாக மார்ச் 27 அன்று பேருந்து சேவை எண் 972-இல் பணிபுரிந்தார் என்று SMRT ரோட் ஹோல்டிங்ஸ் தலைவர் டான் கியான் ஹியோங் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : COVID-19: விதிமுறைகளை மீறும் முதலாளிகளுக்கு எச்சரிக்கை; சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்..!

அவரது ஓய்வு நாள் மார்ச் 28 என்றும், அவர் மார்ச் 29 அன்று உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், மேலும் அன்று ஒரு மருத்துவரைப் பார்த்தார் என்றும் திரு டான் குறிப்பிட்டுள்ளார்.

அதை தொடர்ந்து மார்ச் 31 அன்று மீண்டும் அவர் மருத்துவரை சந்தித்தார், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உதவி வழங்குகிறோம்” என்றும் திரு டான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஓட்டுநருடன் தொடர்பு கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் வளாகங்கள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளன என்றும் திரு டான் தெரிவித்துள்ளார்.

SMRT ஏற்கனவே ஜனவரி முதல் கைப்பிடிகள், நிறுத்தப் பொத்தான்கள் உள்பட, பயணிகள் அதிகம் தொடக் கூடிய இடங்களில் துப்புரவுப் பணிகளை அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 129 பணியிடங்களுக்கு வேலை நிறுத்த உத்தரவுகள் – மனிதவள அமைச்சகம் அதிரடி..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil