முதல் “பஸ்-ஸ்டாப் ஜிம்”… காத்திருக்கும் நேரத்தை இனி வீணடிக்க வேண்டாம்.. ஒர்க் அவுட் செய்து ரீசார்ஜ் பெறுங்கள்!

First bus stop-gym
@desmond.lee on Instagram

சிங்கப்பூரில் பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான வழியை சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் (SUTD) மாணவர்கள் குழு கண்டுபிடித்துள்ளனர்.

“ரீசார்ஜ்” செய்யும் வசதி கொண்ட முதல் ஜிம் பேருந்து நிறுத்த மாதிரி தற்போது 200-பூன் லே டிரைவ் பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ளது.

இந்தத் திட்டம் இரண்டு வார சோதனையாக அமைக்கப்பட்டுள்ளது, இது நவம்பர் 21 முதல் டிசம்பர் 5, 2022 வரை இருக்கும்.

சுகாதார அமைச்சக அலுவலகம் (MOHT) மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஆகியவற்றுடன் SUTD இணைந்து பணிபுரிந்து இதனை உருவாக்கியுள்ளது.

பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள இவ்வற்றை பயணிகள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை, தேசிய வளர்ச் அமைச்சர் டெஸ்மண்ட் லீயின் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி… கழிவறையில் பொட்டலம் – 2 தங்க கட்டிகள்: போலீசார் விசாரணை

ரீசார்ஜ் என்றால் என்ன ?

SUTD Soulab வலைத்தளத்தின்படி, ரீசார்ஜ் என்றால் எளிமையான உடற்பயிற்சி நிலையங்களை உள்ளடக்கிய வேடிக்கையான உடற்பயிற்சி விளையாட்டு என்று விவரிக்கிறது.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு புளூடூத் கார்டு ஒன்று வழங்கப்படும், அது அவர்களின் செயல்பாடு மற்றும் அவர்கள் குவித்த நாணயங்களைக் கண்காணிக்கப் பயன்படும்.

பயனர்கள் தங்கள் வொர்க் அவுட்டைத் தொடங்கும் முன் தங்கள் அட்டையைத் அதில் காட்டி அணுகலை பெற வேண்டும்.

இதனை அடுத்து உடற்பயிற்சியை செய்ய தொடங்கியவுடன், ​​பயனர்கள் தங்கள் மொபைலை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

அதோடு மட்டுமல்லாமல் வாரத்தில் 150 நிமிடங்கள் உங்களால் இந்த இயந்திரத்தில் எட்ட முடிந்தால், சிறப்பு வவுச்சர்களையும் நீங்கள் பெறலாம்.

மெல்லும் புகையிலை, சிகரெட் பறிமுதல் – வெளிநாட்டவர் மீது குற்றச்சாட்டு