சிங்கப்பூரில் ஜூன் 2ம் தேதி முதல் மீண்டும் செயல்படும் வர்த்தகங்கள்..!

Businesses reopen
Businesses reopen (Photo: Flicker)

COVID-19 கிருமிப் பரவல் தடுப்புக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் பாதுகாப்பு நிர்வாக வழிமுறைகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள்  மீண்டும் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக ஆதரவு சேவைகள்:

  • இயந்திரம், கருவிகள், பொருட்களின் வாடகை மற்றும் குத்தகைச் சேவைகள்.
  • ஆள் சேர்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு முகவைகள் (பணிப்பெண் முகவைத்தவிர)
  • துப்புரவு சேவைகள் (வீட்டுத் துப்புரவு சேவை தவிர)

வேளாண்மை மற்றும் மீன்பிடித்துறை:

  • உணவுப் பயிர்கள், பழம் மற்றும் செடி வளர்த்தல்
  • மீன் பண்ணைகள்

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பயணக் கட்டுப்பாடுகள் நீங்கினாலும், அத்தியாவசிய பயணம் மட்டுமே பரிசீலிக்கப்படும்..!

நிதித்துறை நடவடிக்கைகள்:

  • காப்புறுதி
  • நிதித்துறை சேவைகள் (நாணய மாற்று சேவைகள் தவிர)

உணவு சேவைகள் (கடைக்குள் சாப்பிட அனுமதியில்லை):

  • உணவு விநியோக நிறுவனங்கள்
  • சிற்றுண்டிகள் (Canteen)
  • பானங்களை மட்டும் விற்கும் ‘பப்பல் டீ’ கடைகள் போன்றவை செயல்படமுடியாது

சுகாதார சமூக சேவைகள்:

  • சுகாதார சமூக பராமரிப்பு மற்றும் சமூக சேவைகள்

தொடர்பு தகவல்:

  • இணைய நிரலாக்கம், ஆலோசனை
  • பதிப்பகங்கள்
  • படப்பிடிப்பு, ஒலிப்பதிவு போன்ற தயாரிப்புத் துறை சார்ந்த பணிகள்

சில்லறை வர்த்தகம்:

  • இயந்திரப் பொருட்கள், சாயம், கண்ணாடி போன்ற சில்லறை விற்பனை
  • பள்ளி புத்தக கடைகள், பள்ளிச் சீருடை விற்கும் கடைகள்
  • மருந்தகம், சீன பாரம்பரிய மருந்தகம்

உற்பத்தித்துறை:

  • ஜவுளி ஆடைகள், காலணிகள், அறைகளின் பொருட்கள் உற்பத்தி மற்றும் பொது இயந்திரங்கள், போக்குவரத்து உபகரணங்கள் உற்பத்தி
  • அச்சுத்துறை
  • என்னை, எரிபொருள் உற்பத்தி, சுரங்க நடவடிக்கை (என்னை துறப்பது மேடை, காவல்துறை இயந்திர உற்பத்தி, பழுது பரப்பு வேலைகள் தவிர)

நிபுணத்துவ தொழில்நுட்ப நடவடிக்கைகள்:

  • சொத்து சந்தை நடவடிக்கைகள்
  • சட்ட, கணக்காய்வு நடவடிக்கைகள்
  • கட்டடக்கலை, பொறியியல் பணிகள்
  • அறிவியல் துறை ஆய்வு, மேம்பாடுகள்
  • விளம்பரம், சந்தைப்படுத்துதல் தொடர்பான ஆய்வு
  • விளங்கு மருத்துவ நடவடிக்கைகள்

போக்குவரத்து:

  • பணிமனைச்சேவைகள்
  • அஞ்சல், கூரியர் சேவைகள்
  • கப்பல், கப்பல் எரிபொருள் வர்த்தகம்
  • தரை, வான், கடல்வழிப் பயணங்கள் (அனைத்து சொகுசு கப்பல் சேவைகள், சுற்றிப் பார்க்கும் படகு சேவைகள்)

மொத்தவிற்பனை:

  • வேளாண்மை பொருட்கள், உணவு, குளிர்பானம், புகையிலைப் பொருட்கள்
  • எரிபொருள், ரசாயனப் பொருட்கள், உலோகங்கள்
  • வீட்டு உபயோகப் பொருட்கள்

மற்றவை:

  • கருவிகள், மின் கருவிகள் பழுதுபார்த்து
  • சைக்கிள், மோட்டார் வாகன பழுதுபார்த்து
  • சலவைசேவைகள்
  • முடிதிருத்தம், சிகையாளங்கராச் சேவைகள்

கூடுதல் விவரங்களுக்கு: https://covid.gobusiness.gov.sg/permittedlist/

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 611 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி.!

#when is phase 2 #when is phase 2 singapore #when is phase 2 of circuit breaker phase 3 singapore cb phase 1 2 3 #singapore phase 1 2 3 phase 2 of circuit breaker