சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைக்காக கஞ்சா! – சட்டப்படி அனுமதியா? தடையா?

drugs seized CNB operation
(Photo: CNB)

போதைப்பொருட்களில் ஒன்றான கஞ்சா பல்வேறு நாடுகளிலும் மக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டுள்ளது.தாய்லாந்தில் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் போன்ற அண்டை நாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன.போதைக்கு அடிமையானவர்கள் கஞ்சாவை பலவிதமாக உட்கொள்கின்றனர்.

கஞ்சா என்பது போதைப்பொருள் மட்டுமின்றி மருத்துவத்திலும் அது பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு மருத்துவத்தில் கஞ்சாவை பயன்படுத்துவது குறித்து சிங்கப்பூரர்களிடம் கருத்துக்கேட்பு ஆய்வு நடத்தப்பட்டது.இந்த ஆய்வில் 53 சதவீத சிங்கப்பூரர்கள் ஆதரவு தெரவித்துள்ளனர்.

மருத்துவத்திற்காக கஞ்சாவை பயன்படுத்துவதில் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.35 சதவீதத்தினர் கஞ்சாவை எந்தவொரு காரணத்திற்கும் எந்த வடிவிலும் பயன்படுத்துவதற்கு சட்டப்படி அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எஞ்சியுள்ள 12 சதவீதத்தினர் பொழுதுபோக்கு மற்றும் மருத்துவத்திற்கு சட்டப்படி அனுமதி அளிக்கலாம் என்று கூறுகின்றனர்.சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைக்காக கஞ்சாவைப் பயன்படுத்துவது அரிதானது.

2019-லிருந்து இருவருக்கு மட்டுமே கஞ்சாவில் இருந்து பெறப்பட்ட மருந்து உபயோகிக்க அனுமதி அளிக்கப்பட்டது.