சிமெண்ட் லாரியில் சிக்கிய 37 வயது ஆடவர் மரணம்

Accident Area. Photo: chin min daily

37 வயதுடைய ஆடவர் ஒருவர், பிடோக் “ஆக்டிஃப் எஸ்ஜி ஸ்டேடியம்” இருக்கும் பிடோக் நார்த் ஸ்டீரீட் 2ல் உள்ள கட்டுமானப் பகுதியில் இருந்த சிமெண்ட் லாரியின் அடியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செப்டம்பர் 17ம் தேதி மாலை 5.55 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினருக்கு, உதவிக்கு அழைப்பு வந்துள்ளது.

சிங்கப்பூரில் மேலும் இரண்டு நோய்த்தொற்று குழுமங்கள் அடையாளம்!

மீட்புக்கான சாதனங்களைக் கொண்டு உயிரிழந்த ஆடவரின் உடலை, தற்காப்பு படையினர் மீட்டெடுத்தனர்.

விபத்து நேர்ந்த பகுதியில் கிட்டதட்ட 8 போலிஸ் வாகனங்கள் காணப்பட்டது.

26 வயதுடைய ஒரு ஆடவரின் கவனக்குறைவினால் இந்த விபத்து நடந்ததாக, காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்து நடந்த பகுதியில் மனிதவள அமைச்சு புலனாய்வு அதிகாரிகளும் காணப்பட்டனர்.

உலகில் மிக வேகமான அகண்ட அலைவரிசை வேகத்தைக் கொண்டுள்ள சிங்கப்பூர்!