சிங்கப்பூரில் அடுத்த 12 மாதங்களுக்கு அதிகமானோர் வேலை இழக்க நேரிடலாம் – சான் சுன் சிங்..!

(PHOTO: PAP)

சிங்கப்பூரில் அடுத்த 12 மாதங்களில் அதிகமானோர் வேலை இழக்க நேரிடலாம் என்று மக்கள் செயல் கட்சியின் (PAP) இரண்டாம் துணைத் தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் (Chan Chun Sing) கூறியுள்ளார்.

நாங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், முதலீட்டாளர்கள் சிங்கப்பூரில் தங்கள் முதலீடுகளை செய்வதற்கும், மேலும் நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையைத் தூண்டுவதற்கு உகந்த சூழல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க : அப்பர் செரங்கூன் ரோடு பகுதியில் இறந்து கிடந்த பெண் – வெளிநாட்டு வீட்டு பணிப்பெண் மீது குற்றச்சாட்டு..!

பொருளியல், சுகாதாரத் துறை, முதலீடு போன்றவற்றில் சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் அரசாங்கம் வலுவான திட்டங்களை, பாதிக்கப்பட கூடியவர்களுக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊழியர்களுக்கு ஆதரவளிக்க தேவையான கடுமையான முயற்சிகளை, தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் மேற்கொண்டு வருவதாக திரு.சான் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளை முதல் சம்பவம் உறுதி செய்யப்பட்டபோதே மூடியிருக்க வேண்டும் – டான் செங் போக்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg