சாங்கி விமான நிலைய தொழிலாளர்களுக்கு பழப்பெட்டிகள் வழங்கல்!

Photo: Changi Airport Official Facebook Page

 

சிங்கப்பூரில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கொரோனா காலத்தில் பணியாற்றும் முன்களப்பணியாளர்களின் உடல் நலத்தில் மிகுந்த அக்கறைக் கொண்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது.

 

அந்த வகையில் சிங்கப்பூரில் அதிக பயணிகள் வந்து செல்லும் சர்வதேச விமான நிலையமாக திகழ்கிறது சாங்கி விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் தொழிலாளர்கள் கொரோனா காலத்திலும் தொடர்ந்து இடைவிடாமல் பணியாற்றி வருகின்றனர். இதனால் இவர்களும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுகின்றன. இவர்களின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு விமான நிலையத்தின் நிர்வாகம் சானிடைசர், முக்கவசம், உள்ளிட்டவை அடங்கிய கிட்டை தொழிலாளர்களுக்கு வழங்கியது.

 

அதன் தொடர்ச்சியாக, கடந்த வாரங்களில் சிங்கப்பூரில் உள்ள ஹவாய் நிறுவனம் சார்பில் விமான நிலைய தொழிலாளர்களுக்கு ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை அடங்கிய பழப்பெட்டிகள் வழங்கப்பட்டது. அதேபோல் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவையும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் விமான நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.