சாங்கி விமான நிலையத்தில் மூடப்படும் முக்கிய ஓடுபாதை – புதிய அறிவிப்பு

changi airport close runway 2
changi airport close runway 2

சாங்கி விமான நிலையத்தின், ஓடுபாதை 2 கட்டுமானப் பணிகளுக்காக மூடப்படுவதாக சாங்கி விமான நிலையை குழுமம் அறிவித்துள்ளது.

சாங்கி விமான நிலையத்தின் 5ஆம் முனையம், சாங்கி ஈஸ்ட் தொழிலியல் வட்டாரம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளுக்காக ஓடுபாதை 2 தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெர்மினல் 2 மூடப்படும் போது, அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து ஓடுபாதை 1,3 ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்படும்.

விமானச் செயல்பாடுகளின் பாதுகாப்பை இது உறுதிசெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில், சாங்கி விமான நிலையம் மூன்று ஓடுபாதை அமைப்பை உருவாக்க 1.12 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை வழங்கியது. இது விமான பயணத்திற்கான தேவை அதிகரித்ததால் அதிக விமானங்களை கையாள வழி வகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.