மேம்பாலச்சாலை இடிந்து விழுந்த விவகாரம் : திட்டங்களை முறையாக சரி பார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்!

Changi viaduct collapse at about 3.30am on 14 July 2017. (PHOTO: SCDF)

அங்கீகாரம் பெற்ற பொறியியல் ஆலோசகர் தன்னுடைய பணியை முறையாக செய்ய தவறியதால் சாங்கி மேம்பாலச்சாலை 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடிந்துவிழுந்தது.

நிர்வாக இயக்குநர், இந்த கட்டுமானத் பணியின் அமைப்புமுறை திட்டங்களையும், வடிவமைப்பு கணக்கீடுகளையும் சரிபாரக்கத் தவறியதால் இந்த சம்பவம் நடைபெற்றது.

லியோங் சாவ் ஹொன் 61 வயது, கட்டடக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் குற்றம் புரிந்ததாகத் திங்கட்கிழமை (ஜூன் 24) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்ட முதல் நபர் இவர் ஆவார்.

மத்திய ஒர் கிம் பியாவ் கன்ட்ராக்டர்ஸ் நிறுவனம், இந்த சம்பவத்துடன் தொடர்புள்ளதாகக் கருதப்படும் நான்கு பேர், ஆகியோரின் வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த மேம்பாலச்சாலை இடிந்து விழுந்ததில், சீனாவைச் சேர்ந்த 31 வயது ஊழியர் சென் யின்சுவான் உயிரிழந்தார். மேலும், இச்சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.