சிங்கப்பூர் சாங்கி வில்லேஜ் ரோட்டில் அமைந்துள்ள உணவு கடையில் தீ…!

fire accident at Changi Village Road food court singapore
fire accident at Changi Village Road food court singapore (படம்: Facebook/Patrick Tan)

சாங்கி வில்லேஜ் ரோட்டில் (Changi Village Road) அமைந்துள்ள உணவங்காடி நிலையத்தில் இன்று காலை தீப்பற்றியது.

காலை 7.45 மணியளவில் நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் தீ விபத்து குறித்துப் புகார் கிடைத்தாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 528 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

அதிகாரிகள் செல்லுமுன்னரே பொதுமக்கள் சிலர் ஒன்றுகூடி தீயணைப்பான்களைக் கொண்டு தீயை அணைத்தாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

Changi village hawker centre on fire!

Posted by Patrick Tan on Wednesday, April 29, 2020

Facebookஇல் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் தீச்சம்பவத்தை மக்கள் சுற்றிநின்று பார்க்க, ஒரு சிலர் தீயை அணைக்க முயல்வது தெரிகிறது.

மூச்சுத் திணறலுக்காக ஒருவருக்கு அவசர முதலுதவி கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனைக்குச் அழைத்துச் செல்லப்படுவதை மறுத்ததாகக் கூறப்பட்டது.

தீப்பற்றிய இடத்திலிருந்து யாரும் அவசரமாக வெளியேற்றப்படவில்லை. சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

Source: seithi

இதையும் படிங்க: சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு நம்பிக்கையூட்டும் பரத நாட்டிய காணொளி..!