சிங்கப்பூரர்களுக்கு ஆதரவு வவுச்சர்! – பணவீக்கதைச் சமாளிக்கக் கைகொடுக்கும் சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூரில் பணவீக்கம் அதிகரித்ததால் விலைவாசி கிடுகிடுவென உயர்ந்துள்ளது.சிங்கப்பூரர்கள் அன்றாட வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க அரசாங்கம் S$100 (CDC) சமூக மேம்பாட்டு கவுன்சில் வவுச்சர்களை வழங்குகிறது.
இதைத் தவிர வேறு நிதி உதவி நடவடிக்கைகளும் இருப்பதாக நிதித்துறையின் மூத்த அமைச்சர் சீ ஹாங் டாட் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வவுச்சர்கள் வழங்குவதற்குப் பதிலாக 21 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் வழங்க முடியுமா என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் வெய் நெங் கேள்வி எழுப்பினார்.
குடும்பங்களுக்கு அதிக CDC வவுச்சர்களையும், தனிநபர்களுக்கு வவுச்சர்களையும் வழங்குவதை அரசாங்கம் பரிசீலிக்குமா என்று ஆங் கேட்டார்.2022 பட்ஜெட் மற்றும் ஜூன் மாதத்தில் மற்றொரு S$1.5 பில்லியன் ஆதரவுத் தொகை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அவற்றில் சிங்கப்பூரர்களுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் அடங்கும் என்று சீ கூறினார்.

சிங்கப்பூர் குடும்பங்கள் CDC வவுச்சர்களில் சுமார் 180 மில்லியன்களைப் பயன்படுத்தியுள்ளன என்றும் சீ தனது உரையின்போது குறிப்பிட்டார்.
குறைந்த வருமானம் கொண்ட மக்கள் செலவினங்களைச் சமாளிக்க உதவும் வவுச்சர்களைத் தவிர பிற ஆதரவு நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்வதை சீ சுட்டிக்காட்டினார்.
குறைந்த வருமானம் கொண்ட இரண்டு இளம் குழந்தைகளுடன் மூன்று அறைகள் கொண்ட HDB குடியிருப்பில் வசிக்கும் தம்பதியினர் சுமார் S$3,700 ஆதரவைப் பெறுவார்கள் என்று கூறினார்.இதில் பணம், சேவை மற்றும் பாதுகாப்புக் கட்டணங்கள் (S&CC) தள்ளுபடிகள் ஆகியவை அடங்கும்.