சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் பிடிபட்ட தங்கம், குரங்குக்குட்டி, பாம்புகள், ஆமைகள்!

Photo: Video crop image

இலங்கை மற்றும் தாய்லாந்தில் இருந்து இரு வேறு பயணிகளால் கடத்திக் கொண்டு வரப்பட்ட தங்கம் மற்றும் குரங்கு, மலைப்பாம்பு, ஆமை உள்ளிட்டவற்றை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சிங்கப்பூரின் செல்லக்குட்டிக்கு பிறந்தநாள் வந்துருச்சு! – தாயைத் தழுவும் குறும்புக்கார குட்டிப் பாண்டா!

இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணியை சோதனை செய்த போது, அவரது கைப்பையில் இருந்த ஒரு பாக்கெட்டில் பசை வடிவிலான அரை கிலோ 24 கேரட் தங்கம் பிடிப்பட்டது. அதன் மதிப்பு 23 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் என்று சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த பயணி ஒருவர் வைத்திருந்த பையை, அதிகாரிகள் சோதனையிட்டதில் குரங்குக்குட்டி ஒன்றும், ராஜநாகக் குட்டிகள் 15, மலைப்பாம்பு குட்டிகள் 5, ஆமைகள் 2 ஆகியவை இருந்தது தெரிய வந்தது. அவை அனைத்தும் தாய்லாந்தின் விமான நிறுவனமான தாய் ஏர்லைன்ஸ் அதிகாரிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

“மதுரை, சிங்கப்பூர் இடையேயான கூடுதல் விமான சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி!

தங்கம் மற்றும் விலங்குகளைக் கடத்தி வந்தவர்களை கைது செய்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.