இதை செய்து மாட்டிக்காதீங்க! – சமைக்கப்பட்டிருந்தாலும் கூட சட்டப்படி குற்றம்தான்!

broiler chicken

சிங்கப்பூரர்கள் ஜோஹோரிலிருந்து புதிய கோழிகளை வாங்கி செய்தித்தாளில் மடித்து,அதைப் பையின் அடியில் மறைத்து வைத்து கொண்டு செல்வதாக கோழி விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.இவ்வாறு செய்வது குற்றம் என்று உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

சில சிங்கப்பூரர்கள் வாரந்தோறும் ஜோஹோரின் கோழி விற்பனையகங்களிலிருந்து வாரந்தோறும் வாங்கிச் செல்வதாக விற்பனையாளர்களும் அங்காடி ஊழியர்களும் கூறுகின்றனர்.

சென்ற ஜூன் மாதம் கோழி ஏற்றுமதிக்கு மலேசியா தடை விதித்ததிலிருந்து சிங்கப்பூரில் கோழி விநியோகம் பாதிக்கப்பட்டது.இந்நிலையில் சிங்கப்பூரர்கள் புதிய கோழிகளை மறைத்து வைத்து கொண்டு வருகின்றனர்.

இறைச்சி அவர்களின் சொந்த உபயோகத்துக்கு இருந்தாலும்கூட,அதற்கான உரிமம் இன்றி கொண்டு வந்தால் இறைச்சி மற்றும் மீன் கொள்முதல் சட்டத்தின்படி அது குற்றமாகும்.

உரிமமின்றி இறைச்சி மற்றும் மீன்களை இறக்குமதி செய்வோருக்கு இரண்டு ஆண்டு சிறையும் $50,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

மலேசியாவிலிருந்து வரும் பயணிகள் இறைச்சி வகைகளை சமைக்கப்பட்டு இருந்தாலும் கூட உரிமம் இன்றி கொண்டு வர முடியாது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.