இந்திய கட்டுமான ஊழியர்களின் வருகை குறைவு – சீனாவிலிருந்து ஊழியர்களை வரவழைக்கும் திட்டத்தில் 200 நிறுவனங்கள் விண்ணப்பம்

singapore job foreign workers workplace rules
(Photo: Roslan Rahman/ Getty Image)

கட்டுமான நிறுவனங்கள், சீனாவில் இருந்து ஊழியர்களை அழைத்துவரும் தற்காலிக திட்டம் மே மாதத்தில் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.

ஊழியர்கள் தங்களின் திறன் சான்றிதழ்களை பெறுவதற்கு முன்பு சிங்கப்பூர் வர இந்த திட்டம் வழிவகை செய்கிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான திறன் போட்டியில் கரகாட்டம், சமையல் என கலக்கும் இந்திய ஊழியர்கள்!

ஊழியர்கள் பற்றாக்குறையை போக்கும் நோக்கில் சுமார் 1,300 ஊழியர்கள் மட்டுமே இந்த திட்டத்தின்கீழ் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆனால் தற்போது நிலவிவரும் இந்த பற்றாக்குறையை நிரப்ப இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு திறன் சான்றிதழ்கள் இல்லாமல் வரும் ஊழியர்கள், இங்கு அமைக்கப்பட்டுள்ள 5 பயிற்சி நிலையங்களில் தங்களின் திறன் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டுமான ஊழியர்கள் அதிகம் உள்ள இந்தியா, பங்களாதேஷ் போன்ற முக்கிய நாடுகளிலிருந்து இங்கு வரும் ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் உங்கள் இந்திய பாஸ்போர்ட்டை எப்படி புதுப்பிப்பது?