“அமைதியான உலகை உருவாக்க சீனாவுடன் தொடர்ந்து பணியாற்றவிருக்கிறோம்”- பிரதமர் லீ சியன் லூங்!

Singapore Prime Minister Official Facebook Page

இரண்டு நாள் அரசு முறை பயணமாக செப்டம்பர் 13- ஆம் தேதி அன்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ சிங்கப்பூர் வந்தார். அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனை அவர் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு, கொரோனா பரவல், பொருளாதாரம், இரு நாடுகளிடையேயான விமான போக்குவரத்து, வெளியுறவுக் கொள்கைகள் உள்ளிட்டவைக் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார்.

மோட்டார் சைக்கிளைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் கைது!

அதன் தொடர்ச்சியாக, நேற்று (14/09/2021) இஸ்தானாவில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சீன வெளியுறவுத்துறை வாங் யீ நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தென்கிழக்காசியாவில் நிலவும் சூழல், பிராந்தியங்களில் நிலவும் பிரச்சனைகள் உள்ளிட்டவைக் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “பிஆர்சி மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ- யை (PRC State Councilor and Foreign Minister Wang Yi) இன்று (14/09/2021) காலை இஸ்தானாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. எங்கள் நாடுகளுக்கு இடையேயான நீண்டகால உறவை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம். மேலும், சர்வதேச மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து ஆக்கபூர்வமான மற்றும் நேர்மையான விவாதத்தை நடத்தினோம். உலகளாவிய கொரோனா நோய்த்தொற்று சூழலுக்கு மத்தியிலும் நாங்கள் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். உலகின் நமது பகுதியில் சீனாவின் தொடர்ச்சியான பங்களிப்பை சிங்கப்பூர் வரவேற்கிறது. மேலும் இணக்கமான மற்றும் அமைதியான உலகை உருவாக்க சீனாவுடன் தொடர்ந்து பணியாற்றவிருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு பொது இடங்களில் மக்கள் கூட்டம்

இதனிடையே, இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தென் கொரியாவுக்கு சென்றுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, பின்னர் சீனாவுக்கு திரும்புகிறார். இதற்கிடையே, சிங்கப்பூருடன் மின்னிலக்க பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தம் செய்துக் கொள்ள சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.