சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் திரு. லீக்கு வாழ்த்து தெரிவித்த சீன அதிபர்..!

China's President Xi Jinping congratulates PM Lee on election results
China's President Xi Jinping congratulates PM Lee on election results (Photo: Today)

சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தல் வெற்றி குறித்து வாழ்த்து தெரிவிக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) பிரதமர் லீ சியென் லூங்கை தொலைபேசி வாயிலாக அழைத்துள்ளார்.

சிங்கப்பூரின் 13வது பொதுத் தேர்தலில் திரு. லீயின் மக்கள் செயல் கட்சி, 61.24 சதவீத வாக்குகளைப் பெற்று, மொத்தம் 93 இடங்களில் 83 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) அறிக்கையில், திரு லீ மற்றும் திரு ஜி ஆகியோர் தொலைபேசி அழைப்பில், சிங்கப்பூருக்கும் சீனாவிற்கும் இடையிலான வலுவான உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகம் (MFA) தெரிவித்துள்ளது.

COVID-19 பரவலுக்கு இடையே இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உதவி மற்றும் ஆதரவிற்கும் அவர்கள் பாராட்டு தெரிவித்தனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், COVID-19 பரவலுக்கு இடையில் பொருளாதார மீட்டெடுப்பை எளிதாக்குவதற்கான வழிகள் குறித்து எல்லை தாண்டிய மற்றும் விநியோக சங்கிலி இணைப்பை வலுப்படுத்துவதன் மூலமும், நிதி, வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பைப் பற்றியும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பிரதமர் லீ மற்றும் அதிபர் ஜி ஆகியோர், பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர் என்று MFA குறிப்பிட்டுள்ளது.

கூடுதலாக, சீனாவில் ஏற்பட்ட அண்மை வெள்ளத்துக்காக திரு. லீ வருத்தம் தெரிவித்துள்ளார். அதிலிருந்து மீண்டுவர சீனாவால் முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 193 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் COVID-19 தொற்று முற்றிலும் இல்லை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
👉🏻 Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
👉🏻 Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
👉🏻 Twitter      – https://twitter.com/tamilmicsetsg
👉🏻Telegram  – https://t.me/tamilmicsetsg
👉🏻 Sharechat  https://sharechat.com/tamilmicsetsg

Related posts