பள்ளிவாசலில் தொழுகைக்காக வருவோர்களின் செருப்புகளை அழகாக அடுக்கி வைக்கும் சீனர்; பொதுமக்கள் பாராட்டு !

Chinese Man arranged slippers in Mosque!

பள்ளிவாசலில் தொழுகைக்காக வருவோர்களின் செருப்புகளை அழகாக அடுக்கி வைக்கும் சீனர், பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை தொழுவது வழக்கம். இந்த சிறப்பு தொழுகையின் போது பள்ளிவாசல்களில் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், இர்ஃபான் முஸ்தஃபா என்பவர் பள்ளிவாசலின் வெளியே சீனர் ஒருவர் செருப்புகளை அடுக்கி வைப்பதைப் பார்த்தார். கொடுமையான வெயிலையும் பொருட்படுத்தாது செருப்புகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த ஸ்டீவன் என்ற அந்த சீன மனிதரிடம் இர்ஃபான் சென்றார்.

உங்கள் உடலை வருத்தி இந்த வெயிலில் ஏன் அந்தச் செயலில் அவர் ஈடுபடுகிறார் எனக் கேட்டார் இர்ஃபான். செருப்புகளை இப்படி அழகாக அடுக்குவதால் இடம் பார்க்க சுத்தமாக இருக்கும் என்றும் தொழுகைக்குப் பின் மற்றவர்கள் தங்கள் செருப்புகளைச் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும் என்றும் ஸ்டீவன் கூறினார்.

மத நல்லிணக்கத்திற்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாய் இருக்கும் இந்த ஸ்டீவனை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஸ்டீவன், சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது போல, சிறு காரியமும் மற்றவர்களின் நாளைச் சிறப்பிக்கும் என்று தன்னுடைய முகநூல் பதிவில் கூறியுள்ளார்.