தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் ‘Oppo’ ஸ்மார்ட்போன்கள்!!

Chinese smartphone brands such as Oppo are winning in Southeast Asia

Oppo போன்ற சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தென்கிழக்கு ஆசியாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வியட்நாமில் புதிய சீன கைபேசிகள் பிரபலமடைந்து வருகின்றது. மேலும், சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற பிராண்டுகளின் கடந்தகால ஆதிக்கத்திலிருந்து மாற்றம் பெற்று வருகிறது.

வியட்நாமில் OPPO, VIVO மற்றும் Xiaomi போன்ற பிராண்டுகளின் புகழ் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அவைகளின் விளம்பரப்படுத்தும் விதம் மற்றும் குறைந்த விலையில் சிறந்த கைபேசிகள் போன்றவை ஆகும்.

மேலும், OPPO கைபேசியின் டிவி விளம்பரங்கள் தொலைக்காட்சியில் பொன்னான நேரம் (Golden hour) என்று சொல்லக்கூடிய செய்தி மற்றும் திரைப்படங்களுக்கு இடையில் ஒளிபரப்பப்படுவதும் ஒரு காரணமாகும்.

உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தைகளான சீனாவிலும் இந்தியாவிலும் ஏற்றுமதி செய்வதில் மூன்றில் இரண்டு பங்கு சந்தை பங்கைப் அடைந்த பிறகு, இந்த மூன்று சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளும் தென்கிழக்கு ஆசியாவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன.

இரண்டாவது காலாண்டில் மொத்தம் 30.7 மில்லியன் கைபேசி ஏற்றுமதிகளில் 62 சதவீதத்தை oppo நிறுவனம் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 50 சதவீதமாக இருந்தது என்று தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனமான கேனலிஸின் இந்த மாத குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதேபோன்று சீன மொபைல் போன் தயாரிப்பாளரான Oppo-வின் அதே உரிமையாளரின் தயாரிப்பான Realme மொபைல், தென்கிழக்கு ஆசியாவின் முதல் ஐந்து இடங்களுக்கு முதன்முறையாக முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது Samsung, Oppo, VIVO மற்றும் Xiaomi ஆகியவை தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்தி ஐந்து சந்தைகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது.