அடுத்தாண்டு கோலாகலமாய் கொண்டாடப்படும் ‘சிங்கே ஊர்வலம்’ – சீனாவுக்கு உற்சாகமூட்ட உருவாக்கப்பட்ட ஊர்வலம்!

Pic: Lee Hsien Loong

சிங்கப்பூரில் 2023-இல் நடக்கவிருக்கும் சிங்கே ஊர்வலத்தில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியர்கள்,நடனக் கலைஞர்கள் மற்றும் மக்கள் பங்கேற்க உள்ளனர்.

சிங்கப்பூரில் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 1972 ஆம் ஆண்டு சிங்கே ஊர்வலம் நடப்புக்கு வந்தது.காலப்போக்கில் அந்த ஊர்வலம் சிங்கப்பூரின் மிகப்பெரிய கலாச்சார கொண்டாட்டமாகப் பரிணாமம் அடைந்திருக்கிறது.

இந்த கலாச்சார ஊர்வலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3,4-ஆம் தேதிகளில் நடைபெறும்.ஊர்வலத்தில் பெரிய அளவிலான வண்ண மிதவைகள்,மாணவர்களுக்குரிய தேசியக் கல்விக் காட்சி போன்றவை இடம்பெறும். ‘எதிர்காலத்தைத் தழுவிக்கொள்வோம்’ என்பது ஊர்வலத்தின் கருப்பொருள் ஆகும்.

சிங்கே ஊர்வலத்தை நேரடியாக காண விரும்பும் பார்வையாளர்கள் நுழைவுச்சீட்டுகள் வாங்க வேண்டும்.ஊர்வலத்திற்கான நுழைவுச்சீட்டுகள் இன்று முதல் சிஸ்டிக் கடைகளில் கிடைக்கும்.

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள http://www.chingay.gov.sg என்ற இணையதளத்தைப் பொதுமக்கள் அணுகலாம்.சிங்கே முகநூல்,இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் விவரங்களைப் பெறலாம்.