சிகரெட்டுகளை கவனிக்காமல் விட்டு சென்றதால் பற்றி எரிந்த ஹோட்டல் அறை – ஆடவருக்கு சிறை

(Photo: Jenny Kane/AP)

ஹோட்டல் 81 அறையில், எரிந்துகொண்டு இருந்த மூன்று சிகரெட்டுகளை கவனிக்காமல் ஆடவர் ஒருவர் விட்டுச் சென்றதால், தீ விபத்து ஏற்பட்டது.

இதில் S$7,000க்கும் அதிகமான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஹோட்டல் விருந்தினர் ஒருவரும், அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரும் புகையை சுவாசித்ததால் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர்.

“தகுதி சம்பளத்தை மேலும் உயர்த்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை” – மனிதவள அமைச்சர்

இதில் 40 வயதான யாஸ்லீ ருஸ்டி என்ற ஆடவருக்கு ஒரு வருடம் மற்றும் மூன்று மாத சிறைத்தண்டனை நேற்று (செப். 14) விதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு மே 5ஆம் தேதி, மாலை 5.40 மணியளவில் அவர் ஹோட்டல் 81 செலேகியில் உள்ள அறைக்கு சென்றுள்ளார்.

அங்கு புகைபிடிக்க தடை இருப்பதை அறிந்தும் அவர் அறையில் சிகரெட் புகைத்தார், மேலும் படுக்கை அமைப்பின் மேல் சுமார் மூன்று எரிந்த சிகரெட்டுகளை அப்படியே விட்டுவிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவர் இரவு 11 மணியளவில் அறையை விட்டு வெளியேறினார். அதனை அடுத்து, தீ எச்சரிக்கை ஒலி எழும்பியது.

உடனே, அங்குள்ள ஊழியர் யாஸ்லீயின் அறை கதவின் கீழே ஒரு இடைவெளி வழியாக புகை வெளியே வருவதைக் கண்டார்.

தீயணைப்பு கருவி மூலம் கதவின் இடைவெளியில் இருந்து தீயை அணைக்கும் அவரது முயற்சி வெற்றிபெறவில்லை.

அதன் பின்னர் சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படையின் (SCDF) அதிகாரிகள் வந்து, ஜெட் கருவி மூலம் தீயை அணைத்தனர்.

மேலும், ஊழியர் மற்றும் ஹோட்டல் விருந்தினர் ஆகிய இருவரையும் SCDF அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கடந்த மே 7ஆம் தேதி யாஸ்லீயை கைது செய்த போலீசார், கண்ணாடி குழாய் உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பான பொருட்களையும் அவரிடம் இருந்ததை கண்டுபிடித்தனர்.

தடுப்பூசி போட்டுவிட்டதாக போலி சான்றிதழ் அளித்த வெளிநாட்டவர் மீது குற்றச்சாட்டு