சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் சிக்கிய சிகரெட்டுகள்! – வரி செலுத்தப்படாத பொட்டலங்கள் பறிமுதல்!

singapore_custom

சிங்கப்பூரின் யிஷூன் வட்டாரத்தில் ஏராளமான வரி செலுத்தப்படாத சிகெரட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சிங்கப்பூர் சுங்கத்துறை நடத்திய அமலாக்க சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவையனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இம்மாதம் 22ஆம் தேதியன்று யீஷூன் இண்டஸ்டிரியல் தெரு 1இல் உள்ள கிடங்கில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சுமார் 512 பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.அவற்றில் 759 சிகரெட்டுப் பொட்டலங்கள் வரி செலுத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்தன.மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சம்பவத்தோடு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரும் மலேசியர்கள் ஆவர்.மூவரும் இளம் வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் மூவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு வருவாய் இழப்பு எற்படச்செய்த குற்றத்திற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.