சிங்கப்பூரின் ஜிஎஸ்டி முறையை இந்தியா பின்பற்றலாம் – பொருளாதார நிபுணர்கள்..!

Singapore GST 8
Singapore GST 8

சிங்கப்பூரில் அனைத்து தயாரிப்புகளுக்கும் அரசு ஒரே அளவிலான அதாவது 7 சதவீத ஜிஎஸ்டி வரியை பின்பற்றி வருகிறது.

ஆனால், இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் ஒரே வரியான ஜிஎஸ்டி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதில் 5%, 12%, 18% மற்றும் 28% என பல பிரிவுகளில் ஜிஎஸ்டி வகுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்சிடர் பார்ட்னர்ஸ் என்ற ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனை நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் அபிஜித் நாத் கூறுகையில், “வணிக போக்கை எளிமையாக்கவும், குழப்பம் ஏற்படாத வகையிலும் இந்தியா தனது ஜிஎஸ்டி முறையை மாற்றி அமைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அதேபோல் சட்டவல்லுனர் ‘சிலானா சிலானா’ நிர்வாக பங்குதாரர் சந்திப் சிலானா, “இந்தியாவை குறைந்த பட்ச வரி விகிதம் முறையை நோக்கி நகர்த்த வேண்டும். மேலும், பல்வேறு நாடுகளில் அதன் வருவாயை கணக்கில் கொண்டு ஒரே அளவிலான ஜிஎஸ்டி உருவாக்கியுள்ளன, இந்தியா 6% மற்றும் 14% என இரு முறைகளில் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

மேலும், செண்டனியல் ஆசியா அட்வைசர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மனு பாஸ்கரன் கூறுகையில், “உண்மையில் ஜிஎஸ்டி என்பது மிகச் சிறந்த வரிமுறையாகும். ஆனால், அவை சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்படவேண்டும். அவ்வகையில் இந்தியாவுக்கு சிங்கப்பூர் முன்னுதாரணமான நாடாக விளங்குகிறது”, என்றும் கூறியுள்ளார்.