குப்பை சேகரிப்பு அறையில் இறந்து கிடந்த ஊழியர் – தொடரும் விசாரணை

cleaner died Punggol
Photo Credit: Shin Min Daily News Facebook

பிளாக் 623C பொங்கோல் சென்ட்ரலில் உள்ள மத்திய குப்பை சேகரிப்பு அறையில் ஊழியர் ஒருவர் இறந்து கிடந்தார் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் பாதுகாப்பு படை (SCDF) நேற்று அக்டோபர் 16ஆம் தேதி காலை 8:15 மணியளவில் பிளாக் 623C பொங்கோல் சென்ட்ரலில் உதவி வேண்டி அழைப்பை பெற்றதாக கூறின.

ஜூரோங் புதிய தங்குவிடுதியில் மருத்துவ வசதி பற்றாக்குறை!

அந்த சம்பவ இடத்தில் 54 வயதான அந்த துப்பரவு ஊழியர் அசைவில்லாமல் கிடந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்யின்படி, மத்திய குப்பைத் தொட்டியில் கழிவு சேகரிப்பு அறையில் கதவுக்கு இடையே அவர் சிக்கி கிடந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த லீ என்ற அந்த ஆடவர், லியான் செங் கான்ட்ராக்ட் நிறுவனத்தால் வேலைக்கு எடுக்கப்பட்டவர் என்று MOM கூறியது.

“லீ ஒரு முன்மாதிரியான ஊழியர்” என்று நேற்றைய பேஸ்புக் பதிவில், பாசிர் ரிஸ்-பொங்கோல் டவுன் கவுன்சிலின் தலைவர் ஷரேல் தாஹா (Sharael Taha) கூறினார்.

இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் MOM தெரிவித்துள்ளது.

கோபத்தில் கணவரை கத்தியால் குத்திய மனைவிக்கு சிறைத் தண்டனை!