சிங்கப்பூரில் தனிமைப்படுத்தப்பட்ட 4 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தூய்மை, கிருமி நீக்கப் பணிகள்..!

Cleanliness and sanitation at 4 isolated foreign worker dormitories
Cleanliness and sanitation at 4 isolated foreign worker dormitories - MOM (Photo: Ministry of Manpower)

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் காரணமாக, பாதுகாப்பு நலன் கருதி தனிமைப்படுத்தப்பட்ட 4 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலும் தூய்மை மற்றும், கிருமி நீக்கம் செய்யும் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

இதில் முதலாவதாக S11 Dormitory @ Punggol மற்றும் Westlite Toh Guan தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. இரண்டு தங்குமிடங்களில் கிட்டத்தட்ட 20,000 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இரண்டு தங்கும் விடுதிகளில் சுமார் 19,800 வெளிநாட்டு ஊழியர்கள் தனிமை..!

பின்னர் 3வது மற்றும் 4வது முறையே Toh Guan Dormitory, சுங்கை தெங்கா லாட்ஜ் ஆகியவை தனிமைப்படுத்தப்பட்டன.

சிங்கப்பூரில் ஐந்தாவது வெளிநாட்டு தொழிலாளர் தங்குமிடமாக, தெம்பனிஸ் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், COVID-19 பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஊழியர்கள் இரண்டு வார காலத்திற்கு தங்கள் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேரடி மருத்துவ உதவி மற்றும் மேம்பட்ட சுகாதார பரிசோதனைகளையும் பெற்றுவருகின்றனர்.

இந்த நடடிவக்கை நடப்பில் இருக்கும் சூழலில், தங்கும் விடுதிகளில் இருக்கும் ஊழியர்கள் வேலைக்கு செல்வதில்லை. அவர்கள் முழு நேரமும் விடுதிகளிலேயே தங்கியிருக்க வேண்டும்.

இதையும் படிங்க : COVID-19: வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியான சுங்கை தெங்கா லாட்ஜ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!

அது காரணமாக அதிக அளவிலான குப்பை சேருகிறது. தேவைக்கேற்ப நாள்தோறும் அதிகபட்சம் ஐந்து முறை விடுதிகளில் குப்பைகள் அகற்றப்படுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கழிவுப் பொருள்களைத் துரிதமாக அப்புறப்படுத்துவது, விடுதிகளில் சுகாதாரத்தைப் பேணுவது, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வது போன்ற பணிகள் அங்கு தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக MOM கூறியுள்ளது.

விடுதிகளில் தங்கியிருப்போரின் கருத்துகளைக் கேட்டறிந்து அதற்கேற்ப, தொடர்ந்து நிலைமை மேம்படுத்தப்படும் என்று MOM உறுதியளித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் தெம்பனிஸ் தங்கும்விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!