‘கோவையில் இருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாமுக்கு விமான சேவை’- ஸ்கூட் நிறுவனம் அறிவிப்பு!

tamilnadu worker death from singapore scoot
Photo: Flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (Flyscoot)  வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவின் கோவை, விசாகப்பட்டினம், அமிர்தசரஸ் ஆகிய மூன்று நகரங்களில் இருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாம் நாட்டின் (Vietnam) ஹோ சி மின் (Ho Chi Minh) நகரத்துக்கு விமான சேவையை வழங்கி வருவதாக அறிவித்துள்ளது.

சொன்னா கேளுங்க! – 2050-இல் சிங்கப்பூரின் நிலை இதுதானா! மோசமான காலநிலை மாற்றத்தின் தாக்கம்

குறிப்பாக, கோவையில் இருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாமுக்கு தினசரி விமான சேவை வழங்கப்படும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்ப்போம். அதன்படி, கோவையில் இருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் நகரத்துக்கு தினசரி இரண்டு விமான சேவைகளையும், ஹோ சி மின் நகரத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக, கோவைக்கு தினசரி இரண்டு விமான சேவைகளையும் விமான நிறுவனம் வழங்கி வருகிறது.

Photo: Flyscoot Official Twitter Page

நல் உள்ளங்களுக்கு சிறந்த விருது! – பணியிட பாதுகாப்பை மேம்படுத்த தொண்டாற்றிய உறுப்பினர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி

விமான பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ் இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.