ஜூவல் சாங்கி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுவது போன்ற வீடியோ; உண்மையில் எங்கு எடுக்கப்பட்டது ??

Collapsing Jewel Changi Airport ceiling caught on video? It was taken in Shanghai mall

மேற்கூரை இடிந்து கீழே விழுந்து நொறுங்குவது போன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் நேற்று தீயாய் பரவி வந்தது. அந்தக் காணொளி ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

இதனை அடுத்து, அந்த காணொளி ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது அல்ல, என்றும் அது ஷாங்காய் vanke ஷாப்பிங் மாலில் (ஆகஸ்ட் 24) எடுக்கப்பட்ட வீடியோ என்பதையும் ஊடகங்கள் உறுதி செய்துள்ளது.

மேலும், இதுபோன்ற தகவல்களை பரப்பும் போது அதன் உண்மை தன்மையை உறுதி செய்த பின்பு பகிர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சாங்கி விமான நிலையத்தில் இதுபோன்ற எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்பதை SCDF உறுதி செய்துள்ளது.