விபத்தை முன்கூட்டியே உணரும் பேருந்துகள் சிங்கப்பூரில் அறிமுகம்.!

ComfortDelGro introducing buses with auto emergency braking features (PHOTO: COMFORTDELGRO)

விபத்தை முன்கூட்டியே உணரும் பேருந்துகள் சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ComfortDelGro, மோதல் எச்சரிக்கை மற்றும் தானியங்கி அவசரகால நிறுத்தல் அம்சங்கள் பொருத்தப்பட்ட நான்கு வோல்வோ பேருந்துகளை வாங்கியுள்ளது.

முதற்கட்டமாக டிசம்பர் 1, ஞாயிற்றுக்கிழமை முதல் ComfortDelGro பேருந்து செயல்படத் தொடங்கும் என தெரிவித்துள்ளது.

வோல்வோ B8R, 49 சீட்டுகளை கொண்ட இந்த பேருந்து, மோதல் நடக்கவிருப்பதை “உணர்ந்தால்” தானாகவே நிறுத்தும் அம்சம் கொண்டது.

பேருந்து 15 கி.மீ வேகத்தில் செல்லும் போது ரேடார் அடிப்படையிலான சென்சார் மற்றும் கேமரா செயல்பட தொடங்கிவிடும், பேருந்து மற்ற வாகனத்துடன் மோதக்கூடிய சாத்தியத்தை உணர்ந்தாள், டாஷ்போர்டில் ஒளிரும் சிவப்பு விளக்கு மற்றும் ஒலி மூலம் ஓட்டுனரை எச்சரிக்கை செய்யும்.

பேருந்து ஓட்டுநர் எச்சரிக்கைக்கு பதிலளிக்கவில்லை என்றால், மோதல் ஏற்படுவதற்கு முன்பு, பேருந்து தானாகவே நின்றுவிடும் என்று தெரிவித்துள்ளது.