சிங்கப்பூரின் கிழக்கு பகுதிகளுக்கு ஆன்-டிமாண்ட் பேருந்து சேவைக்கான சோதனை ஓட்டம் தொடக்கம்!!

ComfortDelGro launches trial for on-demand bus service

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் ஆன்-டிமாண்ட் பேருந்து சேவையின் மூன்று மாத கால சோதனை ஓட்டத்தை ComfortDelGro தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

ComfortConnect என அழைக்கப்படும் இந்த சேவை ஆகஸ்ட் 15 முதல் Tanjong Rhu மற்றும் Meyer சாலையில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, இந்த பேருந்து சேவையானது சிங்கப்பூரின் கிழக்கு பகுதிகளான Tanjong Rhu/Meyer Road area, Parkway Parade, the Singapore Swimming Club as well as Dunman High ஸ்கூல் ஆகிய 16 நிறுத்தங்களுக்கு இதன் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இந்த சோதனை பேருந்து வார நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும். மேலும், இதற்கான கட்டணம் வசூலிக்கப்படாது, எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.