மனக் கவலையைத் தவிர, வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை

(Image: Singapore Ministry of Manpower/ Facebook)

கவலையைத் தவிர, வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனை அடிமை என்று HealthServeவின் ஆலோசகர் துர்கா அறிவான் பகிர்ந்து கொண்டார்.

அடிமை என்றதும் போதைப்பொருள் அல்லது ஆல்கஹால் போன்றவற்றில் அவரின் எண்ணம் சென்றது, ஆனால் ​​புலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்வது உண்மையில் டிஜிட்டல் போதை, குறிப்பாக கோவிட் -19ன் சூழலின்போது அது ஏற்பட்டுள்ளதாக அவர் ஆச்சரியப்பட்டார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு உடல்நல ஆரோக்கியம் போலவே “மனநல ஆரோக்கியம்” முக்கியம்

பொழுதுபோக்கு இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டவுடன், பல ஊழியர்கள் வேலையில் இருந்து திரும்பியதும் தங்களுக்கு இருக்கும் ஒரே ஓய்வு தங்கள் தொலைபேசி என்று அதன் பக்கம் திரும்பினர்.

முக்கியமாக YouTube, Facebook மற்றும் TikTok போன்ற இலவச தளங்களின் பக்கம் ஊழியர்களின் பார்வை சென்றது.

கடந்த ஆண்டு விடுதிகளில் தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர், அச்சமயம் பெரும்பாலான ஊழியர்கள் டிஜிட்டல் வாழ்க்கைக்கு அடிமை ஆனார்கள்.

அதாவது அதிகாலை 3 மணி வரை ஊழியர்கள் வலைத்தளங்களில் வீடியோக்களைப் பார்ப்பது சாதாரணமாக இருந்தது, அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாத சூழலில், இதுபோன்ற பழக்கங்கள் நீடித்தன என்று அறிவான் கூறினார்.

இது போதைப்பொருள் பயன்படுத்துவது போல் மோசமாகத் தோன்றாவிட்டாலும், டிஜிட்டல் அடிமைத்தனம் ஊழியர்களுக்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் கவலை கொண்டார்.

மேலும், டிஜிட்டல் அடிமைத்தனம் காரணமாக அவர்கள் வேலை செய்யும் போது கவன சிதறல் ஏற்படுவதாகவும், இது ஊழியர்களுக்கு வேலையின் ஈடுபாட்டை குறைப்பதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் புதிதாக 3,486 பேருக்கு தொற்று பாதிப்பு – மேலும் ஒன்பது பேர் உயிரிழப்பு