சிங்கப்பூரில் கட்டுமானம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கால அவகாசம்… மீறினால் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தான் பாதிப்பு

வெளிநாட்டு ஊழியர்
(Photo: MOM/FB page)

சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு கட்டாய பாதுகாப்பு கால அவகாசத்தை மேற்கொள்ள கூடுதலாக 15 நாட்கள் அவகாசத்தை மனிதவள அமைச்சகம் (MOM) அளித்துள்ளது.

பாதுகாப்பு நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய அதிக கால அவகாசம் தேவை என்ற கருத்துக்கள் எழுந்த பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படும் என MOM தகவல் தெரிவித்துள்ளது.

தன் இரு மகள்களையே பல ஆண்டுகளாக நாசம் செய்து வந்த கொடூர தந்தை: 428 ஆண்டுகள் சிறை, 240 கசையடி விதித்து அதிரடி காட்டிய நீதிமன்றம்

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியாது

அக்டோபர் 1 முதல், மனிதவள அமைச்சகம் சோதனைகளை மேற்கொள்ளும், கட்டாய பாதுகாப்பு நடைமுறைகளை முடிக்காத நிறுவனங்களுக்கு எதிராக தடை நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்று அமைச்சகம் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

கட்டாய பாதுகாப்பு காலக்கெடு விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை. அவ்வாறு செய்யத் தவறும் நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

எந்த துறைகளுக்கு பொருந்தும்?

கட்டுமானம், உற்பத்தி, கடல், செயல்முறை அல்லது போக்குவரத்து மற்றும் சேமிப்புத் தொழில்கள், கனரக வாகனங்களைப் பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.

இந்த 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் மொத்தம் 28 பேர் வேலையிட சம்பவங்களில் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன.

பாஸ்போர்ட் இந்த நிலையில் இருந்தால் சிறை நிச்சயம்: சிங்கப்பூர் to திருச்சி… சிக்கிய ஊழியருக்கு சிறை