வேலையிடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் – 280க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம்

companies fined for breaching Covid-19
(Photo: MOM)

அண்மையில் வேலையிடங்களில் 2 கோவிட் -19 நோய்பரவல் இடங்கள் உருவானதை அடுத்து தீவிர நடவடிக்கையை மனிதவள அமைச்சு (MOM) மேற்கொண்டுள்ளது.

வேலையிடங்களில் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்தப்படுவதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

1 சூன் லீ ஸ்ட்ரீட்டில் உள்ள தங்கும் விடுதியில் வசிக்கும் ஊழியருக்கு தொற்று

loheis அல்லது சீன புத்தாண்டு உணவு போன்ற சமூகக் கூட்டங்கள் அனுமதிக்கப்படாது என்பதை MOM நிறுவனங்களுக்கு நினைவூட்டியது.

கடந்த ஆண்டு கடந்த மார்ச் முதல், சுமார் 36,000 வேலையிடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது.

இதில், 280க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது, 140க்கும் மேற்பட்ட முதலாளிகளுக்கு நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல் முறை விதி மீறல்களுக்கு S$1,000 வரை அபராதம் மற்றும் மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டால் S$2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

முதலாளிகளின் கடுமையான விதி மீறல்களுக்கு பணி நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிடப்படலாம்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைவாக வழங்கியதை ஒப்புக்கொண்ட உரிமையாளர்