வெடிப்பு ஆபத்து: 3 நிறுவனங்களுக்கு வேலை நிறுத்த உத்தரவு!

Tuas explosion
(Photo: MWC/Facebook)

எளிதில் தீப்பற்றக்கூடிய தூசி பொருட்களின் ஆபத்து இருந்தபோதிலும், போதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்க தவறிய 3 நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்நிறுவங்களுக்கு வேலை நிறுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முதலாளிகள் வலியுறுத்த வேண்டும்!

கடந்த மாதம் துவாஸில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர், மேலும் ஏழு ஊழியர்கள் காயமடைந்தனர்.

இந்த விபத்துக்கு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களின் அபாயங்களை கொண்ட சுமார் 500 நிறுவனங்களை இலக்காகக் கொண்டு MOM ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது, அவற்றில் பாதி இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான நிறுவனங்களை ஆய்வு செய்ததில் குறைந்த அளவு தீப்பற்றக்கூடிய, மேலும் குறைந்த வெடிப்பு அபாயம் கொண்ட பொருட்களை அவைகள் கையாளுகின்றன என்று அதிகாரிகள் செய்திக்குறிப்பில் தெரிவித்தனர்.

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளைக் கொண்ட அனைத்து நிறுவனங்களும், தங்களின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்யுமாறு MOM வலியுறுத்தியுள்ளது.

தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.!