மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக உணவுப் பொருட்கள் இறக்குமதி – நிறுவனத்திற்கு அபராதம்..!

Company fined for illegally importing fresh vegetables, processed food from Malaysia
Company fined for illegally importing fresh vegetables, processed food from Malaysia (Photo: Singapore Food Agency)

மலேசியாவிலிருந்து காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததற்காக ஒரு நிறுவனத்திற்கு புதன்கிழமை (ஜூலை 15) S$3,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சட்டவிரோதமாக காய்கறிகளில் சுமார் 151 கிலோ மற்றும் பல சரக்குகளில் சுமார் 10 கிலோ பதப்படுத்தப்பட்ட உணவை சிங்கப்பூர் உணவு அமைப்பின் (SFA) அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதையும் படிங்க : கொரோனா எதிரொலி: ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா..!

இந்த பொருட்கள் மலேசியா LHH Vegetable நிறுவனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும் சட்டவிரோத பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக SFA ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சோதனையின் போது கைப்பற்றப்பட்ட காய்கறிகளில் வெண்டிக்காய், வெங்காயம் ஆகியவை அடங்கும் என்றும் SFA குறிப்பிட்டுள்ளது.

அறியப்படாத இடங்களில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட அந்த உணவு பொருட்கள், உணவு பாதுகாப்புக்கு அபாயத்தை ஏற்படுத்தும் என்று SFA தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உணவு இறக்குமதியானது, SFA-ன் தேவைகளையும் உணவு பாதுகாப்பு தரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும், உரிமம் பெற்ற இறக்குமதியாளர்களால் மட்டுமே உணவை இறக்குமதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg