அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து- ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

Photo: Singapore Civil Defence Force Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள பிளாக் 295 சி கம்பாஸ்வாலே கிரேஸ்சென்ட்டில் (Block 295C Compassvale Crescent) உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (20/07/2021) பிற்பகல் 02.50 PM மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் (Singapore Civil Defence Force) தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அத்துடன் காவல்துறையினரும் (Singapore Police) அங்கு சென்றனர்.

அதைத் தொடர்ந்து, தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியில் உள்ள வீட்டின் அறையில் இருந்து அடர்த்தியான கரும்புகை (Black Smoke) வெளியேறியது. இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் சுவாசக் கருவி செட்டை (Breathing Apparatus Sets) அணிந்து கொண்டு தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் அறைக்குள் சென்று தண்ணீரைப் பீய்ச்சியடித்து, தீயை முழுவதுமாக அணைத்தனர். இருப்பினும் அறை முழுவதும் சேதமடைந்தது; அறையில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து தீக்கரையானது.

ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளி சம்பவம்: மாணவனுக்கு எப்படி கோடாரி கிடைத்தது? – அமைச்சர் விளக்கம்

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சுமார் 30 குடியிருப்பாளர்கள் காவல்துறையினரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும், தீ விபத்து ஏற்பட்ட அறையில் இருந்து இரண்டு பேர் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பாக தாங்களாவே வெளியேறினர். இதில் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (Singapore General Hospital For Smoke Inhalation) அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து தீயணைப்புத்துறை வீரர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ‘Portable Vehicle Jumpstarter’-ல் ஏற்பட்ட மின்சார கசிவே காரணம் என கூறப்படுகிறது.