சிங்கப்பூரில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் கிருமித்தொற்று சோதனை முடிவு – 23,300 பேர் தனிமை..!

Completed the testing of all workers in the dormitories - MOH
Completed the testing of all workers in the dormitories - MOH (PHOTO: Today)

சிங்கப்பூரில் அனைத்து வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலும் கிருமித்தொற்று சோதனை முடிவு பெற்றுள்ளது.

“தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் சோதனைகளை இடை-நிறுவன பணிக்குழு முடித்துவிட்டது” என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் சுமார் 11,000 பொதுப்போக்குவரத்து ஊழியர்களுக்கு நோய்த்தொற்று சோதனை..!

தற்போது சுமார் 23,300 ஊழியர்கள் இன்னும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படுவது முடிவடையும் போது அவர்கள் மீண்டும் சோதிக்கப்படுவார்கள், மேலும் வரும் நாட்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை பாதிக்கட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள். அதாவது நேற்று, 175 வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கிருமித்தொற்று உறுதியானது.

இதையும் படிங்க : தேசிய தினத்தன்று பிறந்த முதல் குழந்தைகளை வரவேற்ற சிங்கப்பூர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg