வெளிநாட்டு ஊழியர்களிடையே மீண்டும் தொற்று – சமாளிக்க கட்டுமான நிறுவனங்கள் தயார்..!

(PHOTO: Roslan Rahman via Getty Images)

சிங்கப்பூரில் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட, வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் சுமார் 100 புதிய COVID-19 பாதிப்புகள் கண்டறியப்பட்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்தது.

இந்நிலையில், இந்த புதிய பாதிப்புகள் காரணமாக சுமார் 7,000 வெளிநாட்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அனைத்து வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் COVID-19 கிருமித்தொற்று இல்லை..!

அவர்களில் 2 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்று MOM மற்றும் MOH தெரிவித்தது.

அத்தகைய சம்பவங்கள், தொடரும் என்று கட்டுமான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன என்று செய்தி குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த இக்கட்டான சூழல் நிறுவனங்களின் உற்பத்தித் திறனை பாதிக்கும் என்றும் கருதப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கட்டுமான நிறுவனங்கள் கவனமாகச் செயல்படத் திட்டமிட்டுள்ளன. நிலைமையை 4 மாதம் வரை கவனிக்கவும், மேலும் எச்சரிக்கையாக செயல்படவும் அந்நிறுவனங்கள் முனைகின்றன.

இதனால் 15 சதவீதம் வரை உற்பத்தித் திறனும் பாதிக்கப்படும் என்று நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதையும் படிங்க: வேலை உருவாக்க ஊக்குவிப்புத் திட்டத்தில் பயன்பெற நிறுவனங்கள் ஊழியர் எண்ணிக்கையை கட்டிக்காக்கவேண்டும்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg