சிங்கப்பூரில் சுமார் 2,500 கட்டுமானத் திட்டங்கள் பணிகளை மீண்டும் தொடங்க அனுமதி..!

Construction firms grapple with manpower, cash flow issues as go-ahead given to restart work
Construction firms grapple with manpower, cash flow issues as go-ahead given to restart work (Photo: TODAY)

சிங்கப்பூரில் சுமார் 2,500 கட்டுமானத் திட்டங்கள் பணிகளை மீண்டும் தொடங்க கட்டட, கட்டுமான ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

போதிய மனிதவளம், தாமதங்கள் மற்றும் பணப்புழக்கம் போன்ற சிக்கல்களுடன், சவாலான இந்த காலகட்டம் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்று கட்டுமான நிறுவனங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர் தொடர்பாக ஏற்பட்ட நிர்வாகத் தவறுக்கு மன்னிப்பு கோரிய மனிதவள அமைச்சு, சுகாதார அமைச்சு..!

அனுமதி வழங்கப்பட்ட திட்டங்களில் 900க்கும் அதிகமானவை குடியிருப்புப் பேட்டைகளுக்கான திட்டங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கோவிட்-19 தொற்றிலிருந்து ஊழியர்கள் குணமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தபோதும், பல கட்டுமானத் திட்டங்களை மீண்டும் தொடங்குவதில் சிக்கல்கள் நிலவி வந்தது.

முக்கியப் பொறுப்புகளில் உள்ள சிலரால் கட்டுமானத் தளத்திற்கு வரமுடியாத நிலை, வேலைக்கு போதிய ஊழியர்கள் இல்லாதது போன்ற சில காரணங்களால் அனுமதி வழங்கப்பட்ட போதும் பணிகளை தொடங்குவதில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டது.

மனிதவள குறைபாடு காரணமாக இந்த திட்டங்கள் நிறைவடைய தேவையான காலகட்டம் அதிகமாகும் என்றும் கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வேலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் 140,000 முதலாளிகளுக்கு S$4 பில்லியன்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg