தங்கும் விடுதிகளில் வசிக்காத கட்டுமான ஊழியர்களுக்கான வீட்டில் தங்கும் உத்தரவு நாளை முடிவு..!

foreign workers Mandatory rules outdoor Oct 24
(Photo: RFID)

தங்கும் விடுதிகளில் வசிக்காத கட்டுமானத் துறை ஊழியர்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளும் காலமான 28 நாள், நாளை (மே 18) இரவு மணி 11.59 அளவில் நிறைவுக்கு வருகிறது.

வேலை அனுமதி , S pass ஆகியவை உடைய கட்டுமானத் துறை ஊழியர்களுக்கு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி கட்டாய வீட்டில் தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – மொத்தம் 22ஆக உயர்வு..!

கட்டுமானத் துறையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பணிக்குத் திரும்புவதற்கு முன்பும், ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு முறை வேலைக்குத் திரும்பும் போதும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையத்தின் (BCA) தலைமை நிர்வாக அதிகாரி ஹக் லிம் கூறியுள்ளார்.

ஜூன் மாதத்தில் மேலும் 20,000 ஊழியர்கள் படிப்படியாக பணியைத் தொடங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று திரு லிம் கூறினார். இருப்பினும் ஊழியர்கள் நடப்பில் உள்ள விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றும்படி மனிதவள அமைச்சு (MOH) நினைவூட்டியது.

ஊழியர்கள் பணியில் இருக்கும்போது தனித்தனியாக உணவு மற்றும் முகக் கவசங்களை ஒப்பந்தக்காரர்கள் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்லும்படியும், வெளியே சென்றாலும் கூட்டமாக செல்லாமல் தனியாகவே செல்லும்படியும், வசிப்பிடத்திற்கு உடனடியாகத் திரும்பும்படியும் மனிதவள அமைச்சு (MOH) கூறியுள்ளது.

மேலும் படிக்க : சிங்கப்பூரில் புதிதாக 465 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!