சிங்கப்பூரில் கட்டுமானத் துறைகளில் ஊழியர்கள் தட்டுப்பாடு – திட்டங்கள் பாதிப்பு..!

(Photo: TODAYonline)

மனிதவளத்தில் தட்டுப்பாடு மற்றும் விநியோகத் தொடரில் தடைகள் போன்றவைகளால் கட்டுமானங்களில் தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தேவைக்கு ஏற்றவாறு கட்டப்படும் அடுக்குமாடி வீட்டுத் (பிடிஓ) திட்டங்களில் 85% முடிவதற்கு தாமதமாகும் என்றும் இதில் ஏறத்தாழ 43,000 வீடுகள் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வேலையிடங்களுக்கு திரும்பும் ஊழியர்கள் – பெரும் மகிழ்ச்சி!

நாடு முழுவதும் இந்த கிருமித்தொற்றால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக மனிதவள தட்டுப்பாட்டால் கட்டுமானத்துறைகள் சிரமத்தை சந்தித்துள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.

மேலும் தாமதமாகும் காலத்தை கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் நலன் போன்றவைகளை உறுதிசெய்வது முக்கியம் என்றும் திரு லீ கூறியுள்ளார்.

பிடிஓ மட்டுமின்றி தனியார் குடியிருப்பு, வர்த்தகம் மற்றும் தொழித்துறை திட்டங்களுக்கான கட்டுமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாதத்தில்தான் அதிகமான கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு அனுமதித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

கொவிட்-19 கிருமித்தொற்றானது உலகளவில் மீண்டும் அதிகமாக இருப்பதால், கட்டுமான நிறுவனங்களால் தேவையான அளவிற்கு ஊழியர்களைக் கொண்டுவரமுடியவில்லை என்றும் இத்துறையில் தேவையான அளவிற்கு மனிதவளம் இல்லாத நிலை ஏற்பட்டதாகவும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.

பொங்கோலில் உள்ள KFC உணவகத்தின் உரிமம் தற்காலிக ரத்து