நள்ளிரவிலும் உழைக்கும் கட்டுமான ஊழியர்கள் – உழைப்பை கண்டு அன்பளிப்பு வழங்கிய நல்லுள்ளங்கள்!

construction-workers-Tuas helping
(Photo from Huda)

கோவிட் -19 தொற்றுநோய் பலருடைய வாழ்வில் ஒரு கடினமான நேரம் என்றாலும், இன்னும் பல நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தங்களை அர்பணித்துள்ளனர்.

கடந்த ஜூலை 4ம் தேதி, துவாஸில் உள்ள கட்டுமான ஊழியர்களுக்கு உதவி செய்யும் தம்முடைய நண்பரைப் பற்றி Mothership வாசகர் பதிவை பகிர்ந்து கொண்டார்.

சமீபத்தில், ஹூடா என்ற அந்த ஆடவர் சில நண்பர்களுடன் சேர்ந்து, 60 உணவு பைகளை துவாஸில் உள்ள ஊழியர்களுக்கு விநியோகம் செய்துள்ளார்.

இந்த உதவும் எண்ணம், பின் இரவில் வீட்டிற்கு செல்லும்போது ஏற்பட்டது என்று அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதாவது, துவாஸ் லாம்ப் போஸ்ட் 1 பகுதிக்கு வந்துவிட்டு திரும்பிச் செல்லும்போது, ​​ஹூடாவும் அவரது நண்பரும் ஒரு சில கட்டுமான ஊழியர்கள் இந்த இரவு நேரத்திலும் கடினமாக உழைப்பதைக் கவனித்தனர்.

அன்றைய தினம் அவர்களின் உழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதற்காக, உணவு பைகளை விநியோகிக்கும் யோசனையை அவர்களுக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு பையிலும் பலவிதமான தின்பண்டங்கள் மற்றும் பானங்கள், அத்துடன் கோவிட் -19 தேவைகளான முகக்கவசம் மற்றும் கை சுத்திகரிப்பு திரவம் அடங்கிய பாட்டில்கள் இருந்தன.

இந்த உதவிக்காக ஊழியர்கள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.