பொது சுகாதார பராமரிப்பு துறையைச் சேர்ந்த மேலும் இரண்டு ஊழியர்களுக்கு COVID-19 உறுதி..!

Coronavirus: 2 more public healthcare employees test positive for Covid-19
Coronavirus: 2 more public healthcare employees test positive for Covid-19

பொது சுகாதார பராமரிப்பு துறையைச் சேர்ந்த மேலும் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) தெரிவித்துள்ளது.

அதாவது மருத்துவர் ஒருவரும், செவிலியர் ஒருவரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: அனைத்து வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு..!

மருத்துவர்

நேற்றைய நிலவரப்படி, டான் டோக் செங் மருத்துமனையில் (Tan Tock Seng Hospital) பணிபுரியும் 41 வயதான மருத்துவர் ஒருவருக்கு COVID -19 இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று MOH கூறியுள்ளது.

சிங்கப்பூரில் 3,014வது சம்பவமாக பட்டியலிடப்பட்ட அவர், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கோ அல்லது பிராந்தியங்களுக்கோ சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை.

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி அவருக்கு நோய்க்கான அறிகுறிகள் தோன்றியது, பின்னர் அவருக்கு திங்களன்று COVID-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது அவர் தொற்று நோய்க்கான தேசிய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

செவிலியர்

அதே போல், 22 வயதான சிங்கப்பூர் பொது மருத்துவமனை செவிலியர். பாதிக்கப்பட்ட நாடுகளுக்கோ அல்லது பிராந்தியங்களுக்கோ அண்மையில் பயண மேற்கொள்ளவில்லை.

மேலும் ஞாயிற்றுக்கிழமை நோய்க்கான அறிகுறிகள் தோன்றியதாகவும், பின்னர் அவருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும் MOH குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூரில் 2,738வது சம்பவமாக இது பட்டியலிடப்பட்டுள்ளது.

அவர் தற்போது, கூ டெக் புவாட் மருத்துவமனையில் (Khoo Teck Puat Hospital) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிவது இனி கட்டாயம் – மீறினால் அபராதம்..!