கொரோனா வைரஸ் (COVID-19): சிங்கப்பூரில் 3 புதிய நபர்கள் உறுதி – மொத்தம் 84 சம்பவங்கள் பதிவு..!

கொரோனா வைரஸ் தொற்று பாதித்த மூன்று புதிய சம்பவங்களை புதன்கிழமை அன்று (பிப்ரவரி 19) சிங்கப்பூர் உறுதிப்படுத்தியுள்ளது, இதன் மூலம் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 84ஆக உள்ளது.

இதில் புதிய இரண்டு சம்பங்கள் ஏற்கனவே உள்ள ‘கிரேஸ் அசெம்பிளி ஆஃப் காட் சர்ச்’ மற்றும் ‘தி லைஃப் சர்ச் அண்ட் மிஷன்’ ஆகியவற்றுடன் தொடர்புடையது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் (COVID-19): சிங்கப்பூரில் முதலாளிகளுக்கு மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை..!

இதன்மூலம் ‘கிரேஸ் அசெம்ப்ளி ஆஃப் காட்’ தேவாலயத்துடன் தொடர்புடைய சம்பவங்களின் எண்ணிக்கை 22ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மூன்றாவது நபர் சமீபத்தில் சீனா செல்லவில்லை, முந்தைய நபர்களுடனும் எந்த தொடர்பும் இல்லை, முதலில் இவர் டெங்கு நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில், இங்கு முதலில் உறுதிப்படுத்தப்பட்ட வூஹானைச் சேர்ந்த 66 வயதான நபர் உட்பட மேலும் ஐந்து பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை மொத்தம் 34 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

மேலும் மருத்துவமனையில் உள்ள 50 சம்பவங்களில், பெரும்பாலானவை சீராகவும் அல்லது உடல்நிலை தேறியும் வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் Straits Times குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பியவர் மருத்துவமனையில் அனுமதி; கொரோனா வைரஸ் என அச்சம்?