COVID-19; சிங்கப்பூரில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி..!

சிங்கப்பூரில் மேலும் ஒன்பது உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 சம்பவங்களை சுகாதார அமைச்சகம் (MOH) தினசரி அறிவிப்பில் வெள்ளிக்கிழமை இன்று (பிப்ரவரி 14) தெரிவித்துள்ளது.

இந்த புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மூலம் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கையை 67 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஆறு நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் (COVID-19); சீனாவின் இன்றைய நிலவரம் – 5,000க்கும் மேற்பட்ட புதிய சம்பவங்கள் பதிவு..!

அவற்றில், ஆறு பேர் கிரேஸ் அசெம்பிளி ஆஃப் காட் சர்ச்சில் தொடர்புடையவர்கள் என்று MOH இன் மருத்துவ சேவைகளின் இயக்குநர் கென்னத் மாக் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறியுள்ளார்.

மேலும், புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களில் PUB ஊழியரும் ஒருவர் என்று தேசிய நீர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை இன்று மேலும் இரண்டு நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு வீடு திரும்பினர், அதாவது 17 பேர் தற்போது நோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 3 பேருந்துகள் மோதி விபத்து; 11 பேர் மருத்துவமனையில் அனுமதி..!