கொரோனா வைரஸ்: சிங்கப்பூருக்குள் நுழையவோ அல்லது செல்லவோ இவர்களுக்குத் தடை..!

All short-term visitors barred from entering or transiting in Singapore
All short-term visitors will no longer be allowed to enter or transit through Singapore from 11.59pm on Monday (March 23)

அனைத்து குறுகிய கால வருகையாளர்களும் சிங்கப்பூருக்குள் நுழையவோ சிங்கப்பூர் வழியாக செல்லவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது திங்கள்கிழமை (மார்ச் 23) இரவு 11.59 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கட்டாய உத்தரவை மீறிய 89 பேரின் வேலை அனுமதி ரத்து..!

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் கொரோனா வைரஸ் சம்பவங்கள் ஏற்படுத்தும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உடல்நலம் மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் துறைகளில் பணிபுரியும் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் மட்டுமே சிங்கப்பூர் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

இதுவும் வரும் திங்கள்கிழமை இரவு 11.59 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்று சுகாதார அமைச்சகம் (MOM) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்றுவரை, உலகம் முழுவதும் சுமார் 185 நாடுகளில் 260,000-க்கும் மேற்பட்டோர் இந்த COVIID-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 11,200 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 47 பேருக்கு COVID-19 உறுதி; மொத்தம் 400ஐ தாண்டியது..!

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள், 22 வெவ்வேறு நாடுகளுக்கு பயண மேற்கொண்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி, 432 கொரோனா வைரஸ் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 140 நபர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

அதே நேரத்தில், இன்னும் மருத்துவமனையில் உள்ள 290 நோயாளிகளில், பெரும்பாலானவர்கள் சீராகவும் அல்லது முன்னேற்றம் அடைந்தும் வருகின்றனர். ஆனால் 14 பேர் ஆபத்தான நிலையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil